ஜோதிடம்

2025க்கான புத்தாண்டு பலன்கள்-முழு விபரம் இதோ!

புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டு பல்வேறு மாற்றங்களைத் தரும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் இருப்பீர்கள். அந்த வகையில், 12 ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டில் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எந்த செயல்களைச் செய்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய அனுபங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும், பணியிடங்களிலும் அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். வலிமையான உறவை அவர்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவியாக இருக்கும். புதிய தொழில், புதிய வியாபாரம், புதிய வாய்ப்புகள் ஏற்படும் ஆண்டாக இருக்கும்.

ரிஷப ராசி: 2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்கள் சரியான திட்டமிடலுடனும், பொறுமையுடனும் இருப்பது அவசியம். கடினமான காலகட்டங்களைச் சமாளிக்கும் வகையில் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும், சரியான முடிவை எடுத்தால் வெற்றி வாகை சூடுவீர்கள். கடந்த காலங்களில் செய் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கென உள்ள தனித் திறமையையும், தனித்துவத்தையும் கடைப்பிடிப்பது அனுகூலத்தை உண்டாக்கும்.

மிதுன ராசி: இந்தப் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு செழிப்பான ஆண்டாக இருக்கும். இருப்பினும், அனைத்து செயல்களிலும் கவனத்துடன் இருப்பதும் அவசியம். உங்களுடைய இலக்கை அடைய சரியான திட்டமிடலும், விழிப்புணர்வும் மிகவும் அவசியம். பண வரவு உண்டாகும். பணத்தை சரியாக சுப விரயமாக செய்வது நல்லது. தொழில், பணி, கல்வி சார்ந்த புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது நல்லது. அறிவுப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய இலக்குகளை அடைய இவை உதவியாக இருக்கும்.

கடக ராசி:புத்தாண்டில் கடக ராசியினருக்கு அஷ்டம சனி விலகவுள்ளதால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். எந்தவொரு செயலைச் செய்தாலும் நிதானமாக நடந்து கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு உண்டாகும். இந்தப் புத்தாண்டு மகத்தான ஆண்டாக அமையும்.

சிம்ம ராசி:2025 புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்கலாம். நிதானமாகவும், கடின உழைப்புடனும் செயல்பட வேண்டிய து அவசியம். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆர்வம் கூடும். படைப்பாற்றல் உங்களுக்கு அதிகரிக்கும்.

கன்னி ராசி: 2025 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் செய்யும் செயல்களில் உறுதியுடன் இருப்பது நல்லது. வேலையில் அடுத்தகட்டமாக முன்னேறுவது நல்லது. கடந்த காலங்களில் மிகவும் சோர்ந்து போய் காணப்பட்ட நீங்கள் மிகவும் வலிமையாக உணர்வீர்கள்.

துலாம் ராசி:இந்தாண்டு துலாம் ராசிக்காரர்களின் மீது குருவின் பார்வை விழுவதால் பல்வேறு நற்பலன்களைத் தரும் ஆண்டாக இருக்கும். பல விதத்தில் சாதகமான பலன்கள் தந்தாலும், வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல், மன அமைதி பெறுவதில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நினைத்த அனைத்த காரியங்களும் இந்த ஆண்டில் கைகூடி வரும்.

விருச்சிக ராசி:உங்கள் எண்ணங்களில் தோன்றும் நல்ல காரியங்களை செய்வது நல்லது. புதிய அனுபவங்கள் கிடைக்கும். செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு பல்வேறு பெரிய பெரிய விஷயங்களை சாதிக்கக்கூடிய ஆண்டாக புத்தாண்டு இருக்கும். உங்களுடைய அறிவாற்றல் உங்களுக்கு தக்கசமயத்தில் கைகொடுக்கும்.

தனுசு ராசி:இந்த 2025 ஆம் புத்தாண்டில் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிச் செயல்படுவது நல்லது. எடுத்த காரியங்களை ஆர்வத்துடனும், செயல்களை செய்து முடிப்பதில் உந்துதலுடனும் இருப்பீர்கள். எந்த விஷயங்ளைச் செய்தாலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மகர ராசி: புத்தாண்டில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி முடிகிறது. இந்த மாதத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் செய்த தவறுகள் மற்றும் இழந்தவற்றை நினைவில் வைத்து, செயல்படுவது அனுகூலத்தை உண்டாக்கும். இதனால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை கைவசமாகும்.

கும்ப ராசி: 2025 புத்தாண்டில் கும்ப ராசியினருக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்த ஜென்ம சனி முடிகிறது. இதுவரை நிலவி வந்த அனைத்து பிரச்சனைகளும் உங்களை விட்டு விலகும் என்றாலும், வேலைகளில் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய வியாபாரம், தொழில், முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டாம். உங்களுடைய இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ற வகையில் செல்வது அனுகூலம் தரும்.

​மீன ராசி: 2025 இல் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. உங்களுடைய திறமைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். யோகா, தியானம் செய்வது நல்லது. மன அமைதி மற்றும் உடல்நலனி்ல் கவனம் செலுத்துவது நல்லது. எந்த வேலைகளைச் செய்தாலும் அதில் கடின உழைப்பைத் தர வேண்டியதிருக்கும்.

Paristamilnews.com

Related Posts

No Content Available

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *