2025ஆம் ஆண்டு தொடங்க இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள நிலையில்,26 பொது விடுமுறை நாட்களை உள்ளடக்கிய வரவிருக்கும் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இவற்றில், அதிக எண்ணிக்கையிலான விடுமுறைகளைக் கொண்ட மாதமாக ஏப்ரல் (April) தனித்து நிற்பதோடு, மொத்தம் நான்கு விடுமுறைகளை கொண்டுள்ளதுஏப்ரல் மாதத்தில்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 திங்கட்கிழமை வருகிறது, அதற்கு முன்னதாக ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆயத்த நாளாகும்
கூடுதலாக, மே 12 திங்கட்கிழமை கொண்டாடப்படும் வெசாக் பௌர்ணமி போயா தினம், ஆண்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க திகதியாகும்.
விசேட வங்கி விடுமுறையாக சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து ஏப்ரல் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..