தொழில் அதிபர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின் ஷாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணம் இந்த ஆண்டின் மிகவும் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். ஜீத் திவா மார்ச் 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள் மிகவும் சாதாரணமாகவே செய்து முடித்தனர்.
திருமணம் அதன் ஆடம்பரம் மற்றும் நட்சத்திர விருந்தினர் பட்டியல் காரணமாக அதிகம் பேசப்பட்டு வந்தது. கைலி ஜென்னர் (Kylie Jenner), கெண்டல் ஜென்னர் (Kendall Jenner), செலினா கோம்ஸ் (Selena Gomez) மற்றும் சிட்னி ஸ்வீனி (Sydney Sweeney) போன்ற சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை நட்சத்திரங்கள் டிராவிஸ் ஸ்காட் (Travis Scott) மற்றும் ஹனி சிங் (Honey Singh) ஆகியோர் நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு டெய்லர் ஸ்விஃப்ட்டை (Taylor Swift) அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
திருமணத்திற்கு வரவிருக்கும் விருந்தினருக்கான போக்குவரத்துக்காக 1,000 இற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மற்றும் 58 நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடம்பரமான உணவு ஆகியவை வழங்கப்படவுள்ளது. திருமண அலங்காரத்தில் ஆயிரக்கணக்கான கவர்ச்சியான அல்லிகள் இடம்பெறும், மேலும் 20,000 முதல் 50,000 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ரங்கோலி சிறப்பம்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் டிசம்பர் 2024 இல் உதய்பூரில் நடைபெற்றன. அதே நேரத்தில் அகமதாபாத்தில் அவர்களின் நிச்சயதார்த்தம் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்துடன் ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன, இது ரூ. 5,000 கோடி செலவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜீத் அதானியின் திருமணம் ஆடம்பரத்திலும் செலவிலும் அதை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.