இலங்கை

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய்! இலங்கையில் துயரம்

ஹபரண – பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். பலுகஸ்வெவ பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 10 மாத ஆண் குழந்தை மர்மமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் மரணத்திற்கு, தாயார் தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. புலனாகம – பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில், தாய் தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குழந்தை வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தந்தை வெளியே சென்ற சமயம் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாயார் இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர் குழாய்க்குள் குழந்தையை அமிழ்த்தி விட்டு மீண்டும் கட்டிலுக்கு கொண்டு வந்து கிடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த தாயார் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர், கொலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயாரான 34 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணகைளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *