உலகம்

ட்ரம்ப்பிற்கு 22 மில்லியன் நிவாரணம் வழங்கும் மெட்டா

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு(Donald Trump) பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், 22 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட ட்ரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்க கணக்குகள் முடக்கப்பட்டன.

தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார். அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்புக்கு 22 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வழக்கறிஞ்சர், கலிபோர்னியா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் ‘இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *