உலகம்

கவலைக்கிடமாகும் பிரான்சிஸின் உடல்நிலை

திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. திருத்தந்தையின் உடல்நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று அவரது மருத்துவக் குழு ஒரு நாள் முன்னதாகவே அறிவித்திருந்த போதிலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் தற்போது அறிவித்துள்ளது.

சூழலில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தின் உச்ச மதத் தலைவரான திருத்தந்தை பிரான்சிஸின் மீட்சிக்காக கிறிஸ்தவ சமூகம் பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளது. உடல்நிலை குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு திருத்தந்தை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *