சினிமா

தமிழக வெற்றிக் கழக விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

இளைய தளபதி விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்துடன் சினிமாத்துறையில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ளார். கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இளைய தளபதி விஜய் அரசியல் நுழைவதற்கான பல ஆயத்தங்களை முன்னெடுத்து வந்தார். அதன்படி களப்பணிகளில் கலந்து கொள்வது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பது, பொது பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிப்பது என பல தொண்டுகளை செய்தார்.

விசாகசாலையில் விஜய் நடத்திய முதலாவது மாநாடு பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது. இது பல அரசியல் தலைமைகளுக்கு பேரிடியாக காணப்பட்டது. அதன் பின்பு தற்போது கட்சி தொடர்பான செயல்பாடுகளை விறுவிறுப்பாக முன்னெடுத்து வருகின்றார். விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி பனையூரில் கட்சியின் தலைவரான விஜய் கொடி ஏற்ற உள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்கள் ஆன பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அம்பத்தேக்கர், அஞ்சலை அம்மாளின் சிலைகளையும் இன்றைய தினம் விஜய் திறந்து வைக்க உள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *