உலகம்

உலகின் அழிவுக்கு காரணமாக இருக்கப்போகும் மூன்று விடயங்கள்

கொரோனாவைரஸைப்போல், கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸால், கொள்ளை நோய் உருவாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். மூன்று விடயங்கள் உலகை அச்சுறுத்துபவையாக, அதாவது, உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார் குயின்ஸ்லாந்து பல்கலை ஆய்வாளரான Dr Rhys Parry.

ஒன்று அணு ஆயுதப்போர், அடுத்தது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், மூன்றாவது, உலகை பாதிக்கவிருக்கும் ஒரு கொள்ளை நோய் என்கிறார் Dr Parry. அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் சிலர், அமெரிக்காவில் இதுவரை இல்லாத புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பெயர் கேம்ப் ஹில் வைரஸ் அல்லது CHV (Camp Hill virus). சமீபத்தில் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் மற்றும் ஹேண்ட்ரா வைரஸ் ஆகியவற்றின் குடும்பமான ஹெனிப்பா வைரஸ் (henipavirus) குடும்பத்தைச் சேர்ந்தது இந்த கேம்ப் ஹில் வைரஸ். ஹெனிப்பா வைரஸ்களால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாகும்.

அமெரிக்காவில் இந்த கேம்ப் ஹில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அது கொரோனாவைரஸைப்போல எதிர்காலத்தில் ஒரு கொள்ளை நோயை உருவாக்கலாம் என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் அல்லது மலம் மூலம் அது மனிதர்களுக்கும் பரவக்கூடும்.

வைரஸும் மரபணு மாற்றம் பெற்று மனிதர்களுக்கு பரவக்கூடும் என்கிறார் Dr David Dyjack என்னும் அறிவியலாளர். கேம்ப் ஹில் வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அவருக்கு தண்டுவடம் மற்றும் மூளை பாதிப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சேதம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அமெரிக்காவில் இந்த கேம்ப் ஹில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *