சூர்யா, கடந்த வருடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் நடிப்பில் கங்குவா படம் வெளியானது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்த படம் அதிக பட்ஜெட்டில் தயாரானது. சிறுத்தை சிவா வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கிய இப்படம் கடந்த ஆண்டின் வெற்றிப் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நஷ்டத்தில் முடிந்தது.
கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். பீரியாடிக் கேங்ஸ்டர் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. அட்டகாசமாக தயாராகிவரும் படம் வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இதனிடையில் சூர்யா தெலுங்கு பட இயக்குனரின் கதைக்கு ஓகே கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.
இயக்குனர் சந்து மொண்டேட்டி ஒரு பேட்டியில், நான் இயக்கிய கார்த்திகேயா 2 படம் சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. இருவரும் சேர்ந்து படம் செய்யலாம் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். சூர்யாவிடம் இரண்டு கதைகளை சொல்லி இருக்கிறேன், இரண்டுமே பிடித்துள்ளது. ஒரு கதையை இறுதி செய்வார் என்றார்.












