சினிமா

கணவரை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்த பிக்பாஸ் பிரபலம்…

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.

100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் முடிவுக்கு வந்தது, இதில் முத்துக்குமரன் வெற்றியாளரானார்.

இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பலர் பிரபலம் ஆகியுள்ளனர், அப்படி ஒரு பிரபலம் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரபலங்களில் ஒருவர் தான் சம்யுக்தா. பெற்றோர் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராயன் என்ற மகன் ஒருவரும் உள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது கணவர் துபாயில் இருந்தபோது ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த விஷயம் தெரிய வர சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் விவாகரத்திற்கான தனது பேப்பர் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டதாக கூறி அதிகாரப்பூர்வமாக பதிவு போட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *