ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன்.பிரதீப், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இவானா, மிஷ்கின் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் தான் இசை.
பிப்ரவரி 21ம் தேதி வெளியான இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, இந்த படம் உருவானதே ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தானாம். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை வீட்டிற்கு அழைத்து பாராட்டி இருந்தார்.
டிராகன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் கயாடு.
அண்மையில் ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவரிடம் பிடித்த Celebrity Crush யார் என கேட்டுள்ளனர்.
எந்த சந்தேகமும் இல்லாமல் தளபதி விஜய் பிடிக்கும் என்றும் அவரது தெறி படம் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.