இலங்கைகல்வி

🔺️கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையானது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் (ஆரம்ப வகுப்புக்கள் நடைபெறும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள்) ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சுற்றறிக்கையில் உள்ள முக்கிய விடயங்களாக..

2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பித்தல் பாடசாலைகளில் 2025ம் ஆண்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான வகுப்புக்கள் 2025.01.30 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக “பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம்” 2025.01.31 வெள்ளிக் கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டு 2025.02.17 செவ்வாய்கிழமை வரையில் 10 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும்.

இக்காலத்தை உச்ச அளவில் பயன்படுத்தி மிகவும் நம்பகத் தன்மையுடன் கூடியதாக “பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம்” நடைமுறைப்படுத்துவது அனைத்து அதிபர்களினதும் பொறுப்பாகும் என்பதை தயவாக அறியத்தருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Paristamilnews

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *