ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி குறித்து நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், எந்த நீதிமன்றில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது? என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.