ஹட்டனில் பாரிய விபத்து! மூவர் மரணம் – 30இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.

பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் காயமடைந்த நிலையில் திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version