டிக் டொக்கிற்கு மற்றுமொரு நாடு தடை !

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் டிக் டொக் (TikTok) அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த முடிவானது குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில்  எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தடையானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அல்பேனியாவில் கடந்த மாதம் பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமே இந்த டிக் டொக் தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட டிக் டொக் தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து இதன் விளக்கத்தை எதிர்பார்ப்பதாக டிக் டொக் நிறுவனம் கோரியுள்ளது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட 14 வயது பாடசாலை மாணவனோ அல்லது கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரோ டிக் டொக் கணக்குகளை வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் டிக் டொக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version