நேற்று நள்ளிரவு வீடொன்றில் துப்பாக்கிச்சூடு- அச்சத்தில் அயல் மக்கள்!

குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் – மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 30 வயதான பெண் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் அந்தப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகளை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Exit mobile version