கடலில் மூழ்கி காணாமல் சென்ற மூவர்- தேடும் பணியில் கடற்படையினர்!

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் கிறிஸ்மஸ் தினமான நேற்று பொழுதைக் கழிக்க நீராடச்சென்ற தந்தை, மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் (25.12.2024) மாலை அலையில் சிக்கி காணாமல் சென்றுள்ளனர்.

இவ்வாறு காணாமல் சென்றவர்களை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமுகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version