நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகாமையில் சென்றுள்ளது.
இது பாதிப்பு ஏதுவும் அற்ற நிலையில் சாதனை படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்கலத்திலிருந்து சமிக்ஞைகள் வழமைபோல பெறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
‘பாக்கர் சோலர்’ என பெயரிடப்பட்ட இந்த விண்கல பயணத்தின் மூலம் எதிர்காலத்தில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து 38 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருந்து பாதுகாப்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது விண்கலம் பூமியிலிருந்து 9 கோடியே 30 இலட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Paristamilnews.com