நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவ பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.