புதிய ஆண்டில் தூய்மையான இலங்கையாக மாறும் – அரச ஊழியர்களின் உறுதிமொழி!

2025 புதிய ஆண்டின் புதுவருட தினத்தில் அரச ஊழியர்கள் வித்தியாசமான முறையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் பொது சேவை உறுதிமொழியை வழங்கும்போது , ​​அதில் ‘தூய்மையான  இலங்கை’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் புத்தாண்டு தின உறுதிமொழி நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார தலைமையில்  உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது.

அதன் பிரகாரம், புதிய ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள்  ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொள்ளவுள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முதற்கட்டமாக ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இயங்குவோம்.

 

paristamilnews.com

Exit mobile version