புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.

#image_title

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சோகச் சம்பவம் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்கு ஆயத்தங்கள் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களுக்கு மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதில், புத்தளம் சோல்ட்டன் பகுதியைச் சேர்ந்த இருவரும் மதீனா நகரைச் சேர்ந்த ஒருவருமாவார்.

சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.

Exit mobile version