இந்தியா

கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹால் விவாகரத்து?

கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹால் விவகாரத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இடையேயான விவாகரத்து சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் – சயிரா பானு , தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவிபிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர்.
இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும் தனது மனைவியை விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாக்டர் மற்றும் யூடியூபர் மற்றும் நடன இயக்குநரான தனஸ்ரீ வர்மாவிடம் யுவேந்திர சாஹல் நடனம் கற்க சென்ற போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.

25 67791781b121c

இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குர்கானில் வைத்து இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இந்த தம்பதி பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பயனர் பெயரில் சாஹலின் பெயரை தனஸ்ரீ வர்மா நீக்கியிருந்தார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை யுவேந்திர சாஹல் அன் பாலோ செய்ததோடு அவரது புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சாஹல் – தனஸ்ரீ திருமண வாழ்க்கை முடிவுக்கு வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *