அஸ்வெசும நலன்புரி திட்டத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி!

#image_title

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத குடும்பங்களிலுள்ள சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக, அந்த குடும்பங்களின் வங்கிக்கணக்கில் 6,000 ரூபாவினை வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் 300க்கு குறைவான மாணவர்கள் பயிலும் பாடசாலைகளிலுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறாத குடும்பங்களிலுள்ள சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரண கொள்வனவுக்காக 6,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அத்துடன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களுக்கும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Exit mobile version