ஜெயம் ரவி கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். பொங்கல் ஸ்பெஷலாக அவரது காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொள்வதாக அறிவித்தார். பழையன கழிதலும், புதியன புகுதலும் என குறிப்பிட்டு பெயரை மாற்றிக்கொண்டார்.
விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார், அஜித் கார் ரேஸ் செய்கிறார். அது போல நீங்கள் சினிமாவுக்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என பேட்டியில் ரவி மோகனிடம் கேட்டதற்கு எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது. இமய மலையில் செட்டில் ஆகிவிடுவேன் என அவர் கூறி இருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து அறிவித்துவிட்ட அவர் தற்போது இப்படி ஒரு பதில் கூறி இருப்பது பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.