பிக்பாஸ் 8 வெல்லப்போவது யார்?.. ஓட்டிங் விவரம்

#image_title

100 நாட்கள் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ் 8. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியல் பிரபலங்கள் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினர். எந்த சீசனிலும் இல்லாத விஷயங்கள் 8வது சீசனில் நடந்தது, கடைசி வாரங்களில் டபுள் எவிக்ஷனாக நடந்து வந்தது.

கடைசியாக தீபக் மற்றும் அருண் வெளியேறி இருந்தார்கள். இடையில் ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க் சரியாக முடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் 8 சீசனின் கடைசி நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களின் ஓட்டிங் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 டைட்டிலை வெல்லப்போவது யார், யாருக்கு ஓட்டிங் அதிகம் வந்துள்ளது என்ற விவரம் வைரலாகிறது. முத்துக்குமரன் தான் அதிக வாக்குகள் பெற்று உள்ளார், அவருக்கு அடுத்து சௌந்தர்யா உள்ளார். ஆனால் எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை.

Exit mobile version