சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு செல்வோருக்கு சிக்கல்

#image_title

பிரான்ஸ் நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வேலைக்குச் செல்வோருக்கு சிக்கலை உருவாக்கும் முடிவொன்றை பிரான்ஸ் எடுக்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா மாகாணத்துக்கு வேலைக்குச் செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், சுவிட்சர்லாந்துக்கு செல்வதை தடுத்து, பிரான்சிலேயே வேலை செய்யவைக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. இனி சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள், பிரான்சில் வழங்கப்படும் குறைந்த ஊதியம் கொண்ட வேலைகளை மட்டுமே சுவிட்சர்லாந்திலும் செய்ய அனுமதி உண்டு.

அதிக ஊதியம் வழங்கும் சுவிஸ் வேலைகளை செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு பிரான்ஸ் வழங்கும் வேலையில்லாதவர்களுக்கான நிதி உதவி நிறுத்தப்படும். எல்லை தாண்டி வேலைக்குச் செல்லும் பிரான்ஸ் நாட்டவர்களுக்காக, வேலையில்லாதவர்களுக்கான நிதி உதவியாக, பிரான்ஸ் அரசு 800 மில்லியன் யூரோக்களை செலவிடுகிறது.

Exit mobile version