சம்பளத்தினை உயர்த்தியுள்ள ” love today ” நாயகன்..!

#image_title

“கோமாளி” திரைப்படத்தின் இயக்குநரும் “லவ் டுடே” படத்தின் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனுபாமாவுடன் இணைந்து “dragon” எனும் படத்தில் நடித்துள்ளார்.இப் படத்திற்கான படப்புடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்தினை அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்திருந்தது. இருப்பினும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் red giant movies இனால் distribute பண்ண இருப்பதனால் தியேட்டர்கள் கிடைக்காமையின் காரணமாக படக்குழு வெளியீட்டு திகதியினை பெப்ரவரி 21 ஆக ஒத்தி வைத்துள்ளது.

பிரதீப் அடுத்து மமிதாவுடன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப் படத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவரது படங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளமையினால் இனி வரும் காலங்களில் இதற்கும் அதிகமாக இவரது சம்பளம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version