திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் பதில்

#image_title

தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளராக களமிறங்கி பின் நாயகியாக எல்லா மொழிகளிலும் நடித்து அசத்தி வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

எல்லா நாயகிகளை போல படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பொதுவாக திருமண வயது வந்த நடிகைகளை பத்திரிக்கையாளர்கள் முதலில் கேட்பது உங்களுக்கு திருமணம் எப்போது என்பது தான். கல்யாணத்திற்கு கரண்ட் பில் கட்ட போறீங்களா, சாப்பாடு போட போறீங்களா, இல்ல இன்விடேஷன் அடிக்க போறீங்களா, அதனால் விட்டுவிடுங்கள் என திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பேட்டியில் கூறியுள்ளார்.

Exit mobile version