பவதாரணி கடைசி ஆசை.. என்ன?

#image_title

1995ம் ஆண்டு வெளியான பிரபுதேவாவின் ராசையா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற தனித்துவமான பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பவதாரணி. கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் பாடி வந்தவர் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி புற்றுநோய் காரணமாக கொழும்பு சென்றவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கடைசி ஆசை குறித்து பவதாரணி கணவர் சபரிராஜ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இலங்கைக்கு சென்று சிகிச்சை எடுத்த போது பவதாரணி உடல்நிலை மோசமானது தெரிந்தது, எனவே இந்தியா திரும்ப முடிவு செய்தோம்.

அப்போது பவதாரணி அவரது அப்பா இளையராஜாவை சந்திக்க விரும்பினார், அந்த நேரத்தில் அவரும் கச்சேரிக்காக இலங்கை வர அவரை சந்தித்தார். அதுவே பவதாரணி கடைசி ஆசையாக அமையும் என நினைக்கவில்லை என்று பேசியுள்ளார்.

Exit mobile version