கண்டிஷனாக பேசி நடிக்க வைத்த சந்தானம்

#image_title

சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர். சந்தானம் 12 வருடங்களுக்கு முன் விஷால் உடன் நடித்த மதகஜராஜா படம் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக படங்களில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தான் வைத்து வருகின்றனர்.

சந்தானம் அடுத்து டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம். கௌதம் மேனன் இயக்கிய படங்களையே ஸ்பூப் செய்து அதன் காட்சிகளில் கௌதம் மேனனை நடிக்க வைத்திருக்கிறாராம் சந்தானம்.

‘நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நீங்கள் கேட்ட ஒரே காரணத்திற்காக நடித்தேன், அதனால் இதில் நீங்க தான் நடிக்க வேண்டும்’ என சந்தானம் கண்டிஷனாக கேட்டுக்கொண்டதால் தான் கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Exit mobile version