சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடியா!

#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக அமரன் மாறியுள்ளது.

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டையலில் கோட் படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்தது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 மற்றும் எஸ்கே 24 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் சம்பள விவரம், சொத்து மதிப்பு விவரம் குறித்து இதுவரை பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், Interview ஒன்றில் தனது சொத்து மதிப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட அந்த Interview-வில் ‘உங்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய சிவகார்த்திகேயன், ‘45,000 கோடி இருக்கும் என சொல்லிக்கொள்ள வேண்டியது தான். நாம என்ன அம்பானியா இல்ல அதனியா சொத்து மதிப்பு எல்லாம் சொல்றதுக்கு’ என சொத்து மதிப்பு குறித்து எழுந்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.

Exit mobile version