ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ!

#image_title

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் பிரபலமானவர். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அப்படி வாய்ப்பு தன்னை தேடி வந்தபோது நிராகரித்து இருக்கிறார் ஒருவர். மலையாள நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் தான். லைகா நிறுவனம் தயாரிப்பில் எம்புரான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் பிரித்விராஜ். மோகன்லால் நடித்து இருக்கும் இந்த படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்புரான் படத்தின் விழாவில் பேசிய பிரித்விராஜ், ‘லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் தன்னிடம் எங்கள் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு அது மிகப்பெரிய வாய்ப்பு.’ பகுதிநேர இயக்குனரான என்னால் அந்த குறிப்பிட்டேன் நேரத்திற்குள் ரஜினி சாருக்கு கதை தயார் செய்ய முடியாது என கூறிவிட்டேன்’ என பிரித்விராஜ் கூறி இருக்கிறார்.

Exit mobile version