அலைபாயுதே படத்திற்கு மணிரத்னம் தேர்வு செய்தது மாதவன்-ஷாலினி இல்லையா?

#image_title

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் ஷாலினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த படம் அலைபாயுதே. இளம் டாக்டரான சக்திக்கும் சாப்ட்வேர் இன்ஜீனியரான கார்த்திக்கும் இடையே மலரும் காதலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருந்தது. எவர்கிரீன் ஹிட் படம் என்றே கூறலாம், இப்போது வரை படத்தின் புரொபோசல் சீன் முதல் பாட்டுகள் வரை டிரெண்டிங்கில் உள்ளது. 24 ஆண்டுகள் கழித்து மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது.

இயக்குனர் மணிரத்னம், படம் குறித்து நிறைய சீக்ரெட்ஸ் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு நான் முதலில் தேர்வு செய்தது மாதவன் மற்றும் ஷாலினி கிடையாது. நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் வைத்து இயக்க முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார், இந்த படத்தின் கதை எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால் அலைபாயுதே படத்தை எடுக்காமல் தில் சே படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் ‘எது மிஸ் ஆகிறது’ என்பதை முன்னர் நினைத்தேனோ, அதை கண்டுபிடித்தேன் என்று கூறியிருக்கிறார்.

Exit mobile version