நான் நடிக்காமல் இருப்பது ஏன்?.. நடிகை சமந்தா

#image_title

சமந்தா, தமிழ் சினிமா ரசிகர்களால் பல்லாவரத்து பொண்ணு என பெருமையாக கொண்டாடப்படுபவர். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அப்படியே தெலுங்கு பக்கம் சென்று அங்கேயும் டாப் நாயகியாக, நடிகர்களுக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் படங்கள் கொடுத்து வந்தார். இடையில் சொந்த வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்க, நோயாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். கடைசியாக சிடாடல் வெப் சீரீயல் நடித்து கலக்கி இருந்தார்.

நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம் ஏன் தமிழ் படங்களில் இப்போது அதிகம் நடிப்பதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. நிறைய படங்கள் நடிப்பது எளிமையானது தான். ஆனால் இதுதான் எனது கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அந்தக் கட்டத்தில்தான் நான் இருப்பதாக உணர்கிறேன். ஒரு நடிகையாக சவால் நிறைந்த கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனக்கு மன நிறைவு தராத படங்களில் எப்போதும் நடிப்பதே கிடையாது என்றார்.

Exit mobile version