மதகராஜா படம் செய்துள்ள வசூல்

#image_title

2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது மதகஜராஜா. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்து இருந்தது.விஷாலுடன் இணைந்து சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சோனு சூட் ஆகியோர் நடித்திருந்தனர். 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்தாலும், நகைச்சுவையின் மூலம் மக்களை மகிழ்வித்த இப்படம், மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

15 நாட்களை கடந்துள்ள இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தையும் கொடுத்துள்ளது.

Exit mobile version