நடிகை ஜான்வி கபூர் அணிந்துள்ள புடவையின் விலை

#image_title

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் களமிறங்கி நாயகியாக வருபவர் ஜான்வி கபூர் 2018ம் ஆண்டு Dhadak என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். தென்னிந்தியா பக்கம் ஜுனியர் என்.டி.ஆருடன் தேவாரா என்ற படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.

படம் பெரிய அளவில் ரீச் பெறவில்லை என்று தான் கூற வேண்டும். ஜான்வி கபூர் பரம சுந்தரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  கேரளாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் ஜான்வி கபூர் கேரளா சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளார். அவர் சிம்பிளான ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கிறார். இந்த புடவையின் விலை பற்றிய தகவல் தான் வெளியாகியுள்ளது.

வெள்ளை நிறத்தில் பார்க்க சிம்பிளாக தெரியும் இந்த புடவையின் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரமாம், Anavila பிராண்டின் புடவையாம்.

Exit mobile version