விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி

#image_title

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக காமெடியான பேச்சால் எல்லோரையும் கவர்ந்து பிறகு படங்களில் காமெடியனாக நடித்து அங்கும் ரசிகர்களை சிரிக்கவைத்து வருபவர் இமான் அண்ணாச்சி. அதன் பிக் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

அவர் குடும்பத்துடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்றபோது மாடு சாலையில் குறுக்கே வந்திருக்கிறது. மாடு மீது மோதி கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. இமான் அண்ணாச்சி குடும்பத்தினர் பெரிய பாதிப்பு இன்றி தப்பி இருக்கிறார்கள். செய்தியை இமான் அண்ணாச்சியே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Exit mobile version