துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ்.. கவுதம் மேனன் அப்டேட்

#image_title

13 ஆண்டுகளுக்கு பின் மதகஜராஜா படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். படத்தின் மீது இருக்கும் பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

2023ஆம் ஆண்டு இப்படம் வெளிவரும் என கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு ரிலீஸுக்கு தயாரான நிலையில், கடைசி நேரத்தில் ரிலீசாகாமல் போய்விட்டது மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கவுதம் மேனன், படத்தின் மீதுள்ள பிரச்சனைகள் ஒன்றின்பின் ஒன்றாக தீர்ந்து வருவதாகவும், வருகிற Summer-க்கு படம் ரிலீசாகும் என்றும் தெரிவித்துள்ளார். இது இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகியுள்ளது.

Exit mobile version