நஷ்டத்தை நோக்கி ராம் சரணின் கேம் சேஞ்சர் 

#image_title

படங்கள் இயக்கி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 படம் ரிலீஸ் முடித்த கையோடு தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் இயக்கினார்.  ஜனவரி 10ம் தேதி வெளியான இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில், யாஷிகா ஆனந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் எங்கே ஓடுகிறது என்று தெரியாத அளவிற்கு எல்லா திரையரங்குகளில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சமாக ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் இடம்பெரும் பாடல்களுக்கு மட்டுமே ரூ. 75 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தனர். போட்ட பணத்தை விட அதிகம் இப்படம் வசூல் செய்யும் என அனைவரும் எதிர்ப்பார்க்க இதுவரை படம் ரூ. 200 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ள படு நஷ்டமான படமாக அமைந்துள்ளது.

Exit mobile version