நடிகை ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு

#image_title

கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர், நாயகி என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஸ்ருதிஹாசன் சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அப்பா முன்னணி நடிகராக கலக்கி சொத்துக்கள் சேர்த்தாலும் ஸ்ருதிஹாசன் தனது 21வது வயதில் இருந்தே வேலைகள் செய்து தன்னை பார்த்துக் கொள்கிறார். ஸ்ருதிஹாசன் தனியாக சம்பாதித்து மொத்தமாக ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சொகுசு பங்களா வைத்திருப்பவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார். அவரிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஆடி க்யூ 7 போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றனவாம்.

Exit mobile version