ராஷ்மிக்கா தமிழ் சினிமா, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது கலக்கி வருகிறார். அவருக்கு இந்திய அளவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதை பற்றி அவர்கள் வெளிப்படையாக பேசியதே இல்லை. தற்போது ஒரு மாத இதழுக்கு அளித்த பேட்டியில் ராஷ்மிகா தான் காதலில் இருப்பதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
“எனக்கு கிடைத்து இருக்கும் வாழ்க்கையை நான் மதிக்கிறேன்” என கூறி இருக்கிறார். “நான் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பேன். அதே போல சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் உடன் இருக்கும் எல்லோரையும் மதிப்பவராக இருக்க வேண்டும்” எனவும் ராஷ்மிகா கூறி உள்ளார்.