64 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

#image_title

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவருடைய நடிப்பை பாராட்டியது தங்களான் திரைப்படத்தில் தான். யாரும் பார்த்திராத மிரட்டலான நடிப்பை இப்படத்தில் வெளிப்டுத்தியிருந்தார். மேலும் தற்போது கார்த்தியுடன் சர்தார் 2 மற்றும் பிரபாஸ் உடன் ராஜா சாப் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகில் மூத்த முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம்தான் ஹிருதயபூர்வம். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், மோகன்லால் உடன் மாளவிகா இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே ஆகும்.

Exit mobile version