குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி சினிமாவில் சாதித்த நாயகிகள் உள்ளார்கள். அதில் நடிகை ஷோபனா, கமல்ஹாசன் நடித்த எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின் சட்டத்தின் திறப்பு விழா, இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, பொன்மன செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, எங்கிட்ட மோதாதே, தளபதி, போடா போடி, கோச்சடையான் என பல படங்களில் நடித்தார்.
கடந்த 2006ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமிடம் பத்மஸ்ரீ விருது பெற்றார். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் என பல மொழிகளில் 200க்கும் அதிகமாக படங்கள் நடித்திருக்கிறார்.
பரத நாட்டிய கலையை கற்றுள்ள இவர் பரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார், இதில் பலருக்கு இலவசமாகவும் நடனம் கற்றுகொடுத்து வருகிறார். 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் ஷோபனா அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை, திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை. இப்படியே இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.