விஜய்க்கு முரட்டு முட்டு கொடுக்கும் யூடியூப்பர்கள்..! அலறித் துடிக்கும் தயாரிப்பாளர்கள்

#image_title

பிரபல நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் சினேகா, லைலா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உட்பட மிகப்பெரிய நட்சத்திரபட்டாளமே நடித்திருந்தது. இதன் காரணமாக இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு பெரியளவில் வைக்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் கோட் படத்தை பற்றி வெளியான தகவல்கள், போஸ்டர்கள் என்பன ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்ட வைத்ததோடு, விஜய் தொடர்பான செய்திகளை பிரபல யூடியூப்பர்களும் எக்கச்சக்கமாக அள்ளி விட்டார்கள். ஆனால் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், இளையதளபதி விஜய்க்கு பல யூடியூப்பர்களும் முட்டுக் கொடுப்பதாக பிரபல விமர்சகர் ஒருவர் அதிரடி பேட்டி கொடுத்துள்ளார். தற்பொழுது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், விஜய்னுடைய கோட் படம் வெளியாக மூன்று மாதங்களுக்கு முன்பு அது பற்றி பல தகவல்கள் இணையதள பக்கங்களில் தெறிக்க விடப்பட்டிருந்தன. அதிலும் கோட் படம் 500 கோடி வசூல் அள்ளும், ஆயிரம் கோடி வசூல் அள்ளும் என எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு எந்த ஒரு சத்தத்தையும் காணவில்லை. வயிற்றுப் பிழப்புக்காக இவ்வாறான செயற்பாடுகளை பல யூடியூப்பர்கள் செய்து வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதன் தயாரிப்பாளர் சிறப்பானவராக இருக்க வேண்டும். அதன் மூலம் தான் அதில் நடிக்கும் ஹீரோவுக்கும் வரவேற்ப்பு, மரியாதை கிடைக்கும்.

மேலும் சமீபத்தில் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் வீட்டில் ரெய்டு நடந்தது. அதற்கு காரணம் புஷ்பா படத்தின் மூலம் 2000 கோடி ரூபாய் வசூல், அதில் அதிக லாபம் பெற்றதாக தாறுமாறாக தயாரிப்பாளர் பற்றிய பல செய்திகள் பரவப்பட்டன.

இதன் மூலமே புஷ்பா பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு நடந்தது. அதற்கு காரணம் ஒரு சில யூடியூப்பர்கள் பார்த்த வேலை தான் என தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.

Exit mobile version