சினேகன் – கன்னிகா ரவி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்!

#image_title

கவிஞர் சினேகன் பாடலாசிரியர் மட்டுமின்றி கமல்ஹாசன் கட்சியில் இணைந்து அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2021ல் நடிகை கன்னிகா ரவியை காதல் திருமணம் செய்து கொண்டார் சினேகன். கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.

கடந்த வாரம் கன்னிகாவுக்கு பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது. “தாயே எந்தன் மகளாகவும்.. மகளே எந்தன் தாயாகவும்.. இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள்.” “இதயமும்,மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்.”

கன்னிகா ரவி மகிழ்ச்சியாக பதிவிட அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

Exit mobile version