அனிருத் தமிழில் செம பிஸியான இசைமைப்பாளராக இருந்து வருகிறார். பல டாப் ஹீரோ படங்கள் கைவசம் இருக்கிறது. சுமார் 10 படங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். அவர் தெலுங்கிலும் சமீப காலமாக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. கடைசியாக அவர் தேவரா என்ற தெலுங்கு படத்திற்கு இசைமைத்து இருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
தற்போது அனிருத் மீண்டும் ஒரு முக்கிய தெலுங்கு படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மெகாஸ்டார் சிரஞ்சீவி அடுத்து ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு தான் அனிருத் இசையமைக்க போகிறார்.