உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய விஜய் சேதுபதி

#image_title

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன். இதுவரை வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் வெற்றியடைந்துள்ளது. மணிகண்டனுக்கு திரையுலகில் மிகவும் நெருக்கமான நபர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவருடன் இணைந்து காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா ஆகிய படங்களில் மணிகண்டன் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி போல் அச்சு அசல் அப்படியே மிமிக்கிரி செய்து அசத்துவார் மணிகண்டன். விஜய் சேதுபதி குரல் மட்டுமின்றி நடிகர்களின் குரலை அப்படியே பேசி அனைவரையும் அசரவைத்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி தனக்காக செய்த உதவி ஒன்றை நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார். இதில் “என்னுடைய நண்பனுக்கு ஆபரேஷன் பண்ண வேண்டியது இருந்தது. அப்போ அந்த ஆபரேஷன் பண்ணலனா பிழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க. நான் விஜய்சேதுபதி அண்ணன் கிட்ட தயங்கிதான் கேட்டேன், அடுத்த 10 நிமிஷத்துல Accountல ரூ. 25 லட்சம் பணம் வந்துடுச்சி” என கூறினார்.

Exit mobile version