தயாரிப்பு பக்கம் வந்ததற்கு காரணம்! சிம்பு ரகசியம்

#image_title

சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என திறமை கொண்டவராக வலம் வருகிறார். சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவந்தது.

பார்க்கிங் பட இயக்குனர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார். ஓ மை கடவுளே இயக்குநருடன் இணைந்து தனது 51 – வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.திடீரென சிம்பு தயாரிப்பு பக்கம் சென்றது ஏன் என்பது குறித்து அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

” இந்த படத்திற்காக தேசிங் பெரியசாமி நீண்ட காலமாக என்னுடன் பயணித்து வருகிறார். OTT மார்க்கெட் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் நானே இந்த படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதனால் கமல் சாரை சந்தித்து இந்த படத்தை நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version