முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்குப்பின் இவருடைய ரேஞ் வேற லெவல் போய்விட்டது.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 23வது படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 25வது படமான பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் சோஷியல் மீடியா யூஸ் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ” கடந்த இரண்டு வருடங்களாகவே நான் சோஷியல் மீடியா யூஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். அவ்வாறு நிறுத்திவிட்டதால் எனக்கு நல்ல விதமான தெளிவு கிடைத்திருக்கிறது.
எல்லாம் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் நான் குழம்பி விடுகிறேன். சோஷியல் மீடியா யூஸ் செய்வதை நிறுத்தியதில் இருந்து தெளிவாக முடிவுகளை எடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.