அஜித்னா பொண்ணுகளுக்கு ரொம்ப பிடிக்கும்..! சினிமால திறமைய காட்டல

#image_title

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் பார்த்திபரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இவர் இயற்றிய படங்கள் எல்லாமே குடும்பப் பாங்கான மற்றும் பெண்கள் மீது அக்கறை கொண்ட சமூகப் படமாகவும் காணப்பட்டன.

1990 ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்ரமன். இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக காணப்படுகிறது. ஆனாலும் 2014க்கு பிறகு எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.

பிரபல ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டி வைரலாகி உள்ளது. அதில் அஜித் குமார் பற்றியும் மணிவண்ணன் பற்றியும் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் பற்றி கூறுகையில், உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் மணிவண்ணன். அந்த டைம்ல அவர் ரொம்பவே பிஸியாக நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நான் சூர்யவம்சம் படத்தில் இவர் நடித்தால் நல்லா இருக்கும் என்று அவரை அணுகினேன். அப்போது தான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். எனினும் இந்த கேரக்டர்ல நீங்க பண்ணினா ரொம்ப நல்லா இருக்கும் என எடுத்து சொன்னேன். அதன்பின் அவரும் சம்மதித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட என்னை அவர் சார் சார் என கூப்பிடுவார். ஆனாலும் நான் அவரிடம் பணி புரிந்தவர் என்னை அப்படி கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் என்று சொன்னேன். நான் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் பிறரும் மதிப்பார்கள் என்று சொன்னார். அவர் இயக்குனராக பல படங்களை இயக்கியிருக்கார்.  ஆனால் கதையை எழுதி வைத்து சொல்ல மாட்டார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்ன தோணுதோ அந்த டயலாக்கை தான் சொல்லுவார்.  இவருக்கு பல திறமைகள் இருந்தும் அதனை சினிமாவில் வெளி காட்டவே இல்லை என மணிவண்ணன் பற்றி தெரிவித்துள்ளார்.

அஜித் குமாரும் 1998 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரபலமாக காணப்பட்டதாகவும் காதல் மன்னன், காதல் கோட்டை திரைப்படங்களின் போது அஜித் புகழின் உச்சியிலே காணப்பட்டார் என்றும் அப்போது அவர் 10 லட்சம் மதிப்பிலான பைக்கில் ஹெல்மெட்டும் அணியாமல் வருவார். இவரை பார்ப்பதற்காகவே பெண்கள் பலரும்  கூடியிருப்பார்கள். அப்படி பலருக்கு கனவு கண்ணனாக இருந்தவர் அஜித் குமார் என தெரிவித்துள்ளார் .

Exit mobile version